நவாலியில் 8 பவுண் நகை அபேஸ்

மானிப்பாய் -நவாலி வடக்கில் 8 பவுண் நகை மற்றும் 2 இலட்சம் ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டில் இருந்தவர்கள் அயலில் புதிதாக வீடு கட்டி அங்கு குடியேறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு அங்கு வந்த திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து மேற்குறிப்பிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply