நுவரெலியா வாவியில் கைக்குண்டு மீட்பு

நுவரெலியா, ஜூன் 10:

நுவரெலியா – ஹாவாஎலிய பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வாவியில் (பெரேக் லேன்) இருந்து குறித்த  கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், வழங்கிய தகவலின் பிரகாரம், குறித்த வாவி பகுதியில் மேற்கொள்ள சோதனையில் பாதுகாப்பு பிரிவினால் குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றை நுவரெலியா நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நுவரெலியா காவல்துறையினர். தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பின்பு இந்த கைக்குண்டை அழிப்பதா அல்லது வேறு தரப்பினரிடம் கையளிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply