ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இந்தியர்

கொழும்பு, ஜுன் 11

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினரால் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சென்னையிலிருந்து வந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 1.3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply