இலங்கை மின்சார திருத்த சட்டமூலத்தை அங்கீகரித்தார் சபாநாயகர்

இலங்கை மின்சாரம் திருத்த சட்டமூலத்தின் சான்றிதழை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அங்கீகரித்துள்ளார்.

2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தினைத் திருத்துவதற்கான இலங்கை மின்சாரம் திருத்த சட்டமூலம் திருத்தங்கள் இன்றி அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர் எதிர்க்கட்சி வாக்கெடுப்பைக் கோரியதுடன், இதில் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், 13 பேர் நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய 84 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply