மே-9 வன்முறை சம்பவங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 9 சந்தேகநபர்கள் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் இதுவரை ஆயிரத்து 96 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2 ,784 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த நாட்களில் 857 வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply