நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னே நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை கடந்த சில மாதங்களாக தொடர்கின்றது.
இவ்வாறான நிலையில் எரிபொருளை உரியவாறு மக்களுக்கு கிடைக்க செய்யுமாறு வலியுறுத்தி நாட்டின் பல பாகங்களிலும் வீதிமறியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் நேற்றையதினம் தெகிவலை மட்டக்களப்பு வவுனியா பகுதிகளில் வீதி மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்றையதினம் எரிபொருள் கோரி நுகேகொட தெல்கந்தவில் ஹைலெவல் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் சில வாகன சாரதிகள் வீதியின் நடுவே காட்ஸ் விளையாட்டையும் ஆரம்பித்துள்ளனர்.



பிற செய்திகள்





