இரு மாதங்களுக்கு மூடப்படும் நுரைச்சோலை அனல்மின் நிலையம்

கொழும்பு, ஜுன் 17

நுரைச்சோலை அனல்மின் நிலையம்   பராமரிப்பு   பணிகள் நிமித்தம் நாளை முதல் இரண்டு மாதங்களுக்கு மூடப்படவுள்ளது .

பராமரிப்புப் பணிகள் முடிவடைவதற்கு சுமார்   75 நாட்கள் தேவைப்படுவதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம்  அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையம் ஊடாக   தேசிய மின்கட்டமைப்புக்கு நாளாந்தம்  270 மெகாவோட் மின்சாரம்  வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்  பணிநிறுத்தம் காரணமாக தேசிய மின்கட்டமைப்புக்கு சுமார்   300 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply