இரு மாத சிசுவின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு!

இரு மாத சிசுவின் சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரியின் உத்தரவை மீறி நாவலப்பிட்டி வைத்தியசாலையின் வளாகத்தில் புதைத்த சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .

பிறவிக்குறைபாடுகளுடன் பிரசவித்த 72நாள் சிசுவொன்ரின் சடலம் நாவலப்பிட்டி வைத்திய சாலைக்கு இறந்த நிலையில் கடந்த 1ம் திகதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை நாவலப்பிட்டி பொது மயானத்தில் புதைக்குமாறு நாவலப்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி மல்லிகா ஹேவாரட்னவினால் கடந்த 11 ம் திகதி வழங்கப்பட் ட உத்தரவை மீறி மேலும் இரு கருச்சிதைவுகளுடன் சடலம் வைத்திய சாலையின் பிணவறைக்கு அருகில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது .

இச் சடலம் புதைக்கப்படுவதை அவதானித்த வைத்திய சாலை பாதுகாப்பு பிரிவினர் உரிய தரப்பினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணைகளை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

பிற செய்திகள்

Leave a Reply