உலகவங்கியின் நிதிப்பங்களிப்பில் யாழில் நிர்மாணிக்கப்பட்ட குளங்கள் திறப்பு!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டவரைபில் உலகவங்கியின் நிதிப்பங்களிப்பில் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் புரைமைக்கப்பட்ட குளாங்கள் இன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 03மணிக்கு முதல் நிகழ்வாக யாழ் பாசையூர் பூங்கா திறப்பு விழா யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெறவுள்ளதுடன் குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக . டி.பி.எஸ்.கே.திசாநாயக்க பணிப்பாளர் நகர அபிவிருத்தி அதிகாரசபை அவர்களும் கௌரவ விருந்தினராக மாநகர முதல்வர் வி.மணிவண்ணனும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Leave a Reply