நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அருகில் கிலோமீற்றருக்கும் கூடுதலான தூரம் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எரிபொருள் இல்லாவிட்டாலும், எரிபொருளை பெறுவதற்காக, இரவு, பகலாக ஏராளமானோர் வரிசையில் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கம்பஹா, கொழும்பு, களுத்துறை, மாத்தறை, காலி ஆகிய இடங்களில் மாத்திரமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பல நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் காணப்படுகின்றன.

முச்சக்கர வண்டி சாரதிகள், மோட்டார் சைக்கிள்கள், தனியார் பஸ்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் இவ்வாறு வரிசையில் நிற்பதை காணமுடிகிறது.
பிற செய்திகள்





