IMF ஐ முதலில் நாடியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது: நந்தலால் வீரசிங்க

கொழும்பு, ஜுன் 17

இலங்கை ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தால் தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியைத் தவிர்த்திருக்க முடியும் என்றும், உரிய காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடாதது தவறு என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் எமது நாடு சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலாக சர்வதேச சமூகத்திடமிருந்து 5 பில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தால், கடன்களை மீளச் செலுத்தும் நடவடிக்கையை ஒரு வருடத்துக்கு முன்னதாக ஆரம்பித்திருந்தால் இந்த நிலைவரத்தை தற்போதைய கடும் நெருக்கடிகளின்றி உரியவாறு கையாண்டிருக்கமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply