இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள்! எதற்கு தெரியுமா?

உந்துருளிகளின் இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் போக்குவரத்து சங்கங்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை போக்குவரத்து ஒன்றிணைந்த செயற்பாட்டு மத்திய நிலைய இணைப்பாளர் ஜே.இமாம்டின், முச்சக்கர வண்டிகளுக்கு நாளாந்தம் 8 லீற்றர் எரிபொருளை பெற்றுக்கொடுக்க இதன்போது இணக்கம் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply