
கொழும்பில் காரொன்றில் வந்த பெண்ணுக்கு வீதியில் வைத்து எரிபொருள் ஊர்தியிலிருந்து எரிபொருள் எடுத்து வழங்கிய ஊழியருக்கு எதிராக ஐஓசி நிறுவனம் கடுமையான நடவடிக்கையை எடுக்கவுள்ளது.
குறித்த சம்பவம் கொழும்பு காலி வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐஓசி நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் தாங்கி ஊர்தியில் இருந்தே 2 கொள்கலனில் எரிபொருள் எடுத்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இவ்வாறான ஊழியர்களின் தவறான நெறிமுறையற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து ஐஓசி நிறுவனம் தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த செயற்பாட்டில் எரிபொருள் தாங்கி ஊர்தியின் ஊழியரே ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்





