கொழும்பு,ஜுன் 18
எரிபொருள் நெருக்கடி காரணமாக கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எஸ். என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வாரத்தில் ஒன்லைன் முறையில் கற்பிக்க முடிவு செய்துள்ளதாகவும், ஒன்லைன் கல்வி நடைபெறும் நேரத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கிராமப்புற பாடசாலைகளின் போக்குவரத்து வசதிகளைப் பொறுத்து முடிவு செய்யுமாறு அவர்கள் கல்வியமைச்சினால் கேட்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒன்லைனில் கற்பிப்பது குறித்து அல்லது பாடசாலைகளை திறந்து வகுப்புகளை நடத்துவது தொடர்பில் போக்குவரத்து வசதிகளை அடிப்படையாக கொண்டு பாடசாலை அதிபர் தீர்மானிக்க முடியுமென கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இன்று கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளின் தலைமையில் இடம்பெற்ற சூம் கலந்துரையாடலில் இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
இந்த வாரம் நிலமையை அவதானித்து மீண்டும் அடுத்த சனிக்கிழமை கலந்துரையாடி அடுத்த வாரத்திற்கான தீர்மானம் எட்டப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது






