நாட்டு மக்களின் அடுத்த தாக்குதல் அரச அதிகாரிகள் மீதா?

அரச அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் மக்கள் அடுத்ததாக அரச அதிகாரிகளை தாக்குவார்கள் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார இதனை தெரிவித்தார்.

இதன் காரணமாக தற்போதைய நிலவரத்தை புரிந்து கொண்டு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலையைப் புரிந்து, அதற்குத் தீர்வு காண்பதற்கான திட்டங்களை வகுப்பதில் அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply