சட்டவிரோதமாக எரிபொருளை விநியோகித்த CEYPETCO மற்றும் LIOC ஆகிய நிறுவனங்களால் உரிமம் பெற்ற மூன்று எரிபொருள் வாகனங்களின் உரிமங்கள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் வாகனங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எரிசக்தி அமைச்சர் சட்டவிரோத எரிபொருள் விநியோக முறையில் செயற்பட்டவர்களை காணொளி மூலம் தமது கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்





