3 முக்கிய வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம்! நாமல் தலைமையில் விசேட கூட்டம்

முச்சக்கர வண்டிகள், பேருந்துகள் மற்றும் பாடசாலை வேன்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் போக்குவரத்து துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (18) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பிரதிநிதிகள் தொழில்முறை முச்சக்கர வண்டிகள், தனியார் பேருந்துகள், பாடசாலை மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகள், கொள்கலன் போக்குவரத்து சேவைகள் மற்றும் வணிக போக்குவரத்து வாகனங்கள் உட்பட பல போக்குவரத்து துறைகளை உள்ளடக்கியிருந்தனர்.

எரிபொருள் தட்டுப்பாட்டின் போது மேற்கூறிய போக்குவரத்துத் துறைகள் குறைந்தபட்ச தடையின்றி இயங்கக்கூடிய வகையில் எரிபொருள் விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

எரிபொருள் விநியோக முறைமை விரைவில் வகுக்கப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மீண்டும் வலியுறுத்தியதோடு, அந்த முறைமை அமுலுக்கு வந்ததும் சம்பந்தப்பட்ட மூன்று வாகனங்களும் ஒரே எரிபொருள் நிலையத்தில் பதிவு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கலந்துரையாடலை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் கலந்துகொண்டார்.

அதன் பிரகாரம், பொலிஸாருடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply