
வெளிநாட்டுச் சேவையின் மூன்றாந் தரத்திற்கு உத்தியோகத்தர்களை சேர்த்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சை, திட்டமிட்ட வகையில் நாளைய தினம் நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த போட்டிப் பரீட்சை கொழும்பில் நாளை முற்பகல் 9 மணிக்கு 60 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக பரீட்சைக்கு தாமதமாக வரும் பரீட்சாத்திகள், பரீட்சைக்கு தோற்றுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுச் சேவை அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் அதிகம் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பரீட்சைகளை துரிதமாக முன்னெடுக்குமாறும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்





