
இந்திய வெளிவிவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கர், இந்திய வெளிவிவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற வெளிவிவகாரங்களுக்கான பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், இலங்கையின் தற்போதைய நெருக்கடி குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.
இலங்கை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் அதில் இந்தியாவின் பங்கு குறித்து இந்தக் குழு விவாதித்ததாக கூறப்படுகிறது.
தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏகமனதாக தீர்மானித்ததாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் வி முரளிதரன், மினாக்ஷி லேகி, ராஜ்குமார் ரஞ்சன் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரும் தனது ட்விட்டர் கணக்கில் ஒரு குறிப்பைப் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்





