பல்கலை மாணவர்கள் 4 பேர் பிணையில் விடுதலை

கண்டி,ஜுன் 19

கண்டி,பல்லேகல சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின் போது பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய பல்கலைகழக மாணவியும் 3 மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தெல்தெனிய நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 16ஆம் திகதி பல்லேகலயில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின் போது விளையாட்டரங்கின் நுழைவாயிலில் பொலிஸாரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

24 முதல் 28 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply