ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து நுழைவாயில்களையும் மறித்து கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் போராட்டம்!

காலிமுகத்திடலில் கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர்.

நேற்று (19) நள்ளிரவு முதல் ஜனாதிபதி செயலக வாயில்களுக்கு முன்பாக  சுமார் ஆயிரம் பேர் வரையில் கூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி கோட்டா கோ கமவில் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையிலேயே, ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் இரண்டு நுழைவாயில்களையும் மறித்து மேடைகளை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply