
கொழும்பு, ஜுன் 20
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று (20) வரை பிறப்பிக்கப்பட்டிருந்த குறித்த தடை உத்தரவை மீள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இவ்வாறு நீடிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, இந்த தடை உத்தரவு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.





