போதைக்காக திருடி மாட்டிக்கொண்ட மொட்டு அரசியல்வாதி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட மூன்று பேர் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் உக்குவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை சந்தேக நபர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மத்தளை நீதவான் முன்னிலையில் நேர்நிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply