எரிபொருள் பெற முற்பட்ட வெளிநாட்டவரால் குழப்பம்!

ஹப்புத்தளை நிரப்பு நிலையத்தில் இன்று காலை முதல் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுவரும் நிலையில் ரஷ்ய பிரஜை ஒருவர் வாகன நெரிசல் காரணமாக, கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், குறித்த சுற்றுலாப்பயணி எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு அங்கு கூடியிருந்தவர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தின் ஊடாக இடம்பெறும் எரிபொருள் விநியோகம் தற்சமயம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply