பொறுமையாக இருங்கள் ரணில் தீர்வு வழங்குவார்! வஜீர அபேவர்தன நம்பிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் உரப் பிரச்னை இதுவரை வெற்றிகரமாக நிவர்த்தி செய்யப் பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஆகையினால், பதற்றமடையாமல் பொறுமையாக இருந்தால், எஞ்சியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.

நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்ட நிலையில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை சில வாரங்களுக்கு முன்னர் ராஜினாமா
செய்தது.

சர்வ கட்சி அரசாங்கம் அமைக்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் எவரும் முன்வராததையடுத்து ஐ.தே.க தலைவர் ரணில்
விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றது தெரிந்ததே.

பிற செய்திகள்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)

சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்

விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)

ரணிலை பதவி நீக்க முயற்சியா?

Leave a Reply