யோகா தின நிகழ்வில் ரணில் பங்கேற்பு!

<!–

யோகா தின நிகழ்வில் ரணில் பங்கேற்பு! – Athavan News

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Leave a Reply