தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-20 தொடர் நாளை மறுதினம் ஆரம்பம்!

நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) ரி-20 தொடர், நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

8 அணிகள் இடையிலான 6ஆவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடர், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை இத்தொடர் நடைபெறுகின்றது.

இந்த தொடரின் போட்டிகள், நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றது.

இத்தொடரின் முதல் லீக் போட்டியில், நடப்பு சம்பியன் சேப்பாக் சுப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ரோயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு 7.15 மணிக்கு நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகின்றது.

Leave a Reply