யாழில் 200 ஆண்டில் கால் பதிக்கும் பாடசாலையின் இசை வெளியீடு

யாழ், ஜுன் 20

யாழ். பெரியபுலம் மகா வித்தியாலயத்தின் 200 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 25.06 சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு பாடசாலையின் கனகசிங்கம் மண்டபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. 

பாடசாலையின்  பழைய மாணவன் ரஜீவனின் இசையமைப்பில் உருவான “200 ஆவது ஆண்டு விழா நிறைவு கீதம்“, புதுப்பொலிவுடன் இசையமைக்கப்பட்ட “பாடசாலைக்கீதம்“ என்பன வெளியீடு செய்து வைக்கப்படவுள்ளன.  

பாடசாலையின் பழைய மாணவரும் யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியில் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ம.சத்தியகுமார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.  மேலும் இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத்தின் நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அருட்செல்வி கிருபைராஜா கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

மேலும், நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பாடசாலையின் அதிபர் ந.பரமேஸ்வரன், இசைவாணர் மு.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.  

Leave a Reply