தலைக்கவசத்திற்கு தீ வைத்து எரிபொருள் நிலையத்திற்குள் வீசிய நபர்!

தலைக்கவசமொன்றை தீ மூட்டி, அதனை எரிபொருள் நிலையத்தை நோக்கி வீசிய சம்பவமொன்று கந்தானையில் அமைந்துள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளும், எரிபொருள் நிலைய ஊழியர்களும் விரைந்து செயற்பட்டு தலைக்கவசத்தில் இருந்த தீயை அணைத்தனர்.

இதனால், அங்கு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் கிடைத்ததன் பின்னர், மக்களுக்கு விநியோகிக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்

பிரேசில் நாட்டுடன் சுற்றுலாத்துறை மேம்பாடு; இலங்கை முயற்சி!

நாடாளுமன்றில் இருந்து சஜித் அணியினர் வெளிநடப்பு!

யோகா தின நிகழ்வில் பிரதமர் ரணில் பங்கேற்பு!

இந்தியாவில் தங்கம் வென்ற மாங்குளம் பெண்ணிற்கு கிடைத்த கௌரவம்

குருந்தூர் மலை பௌத்தர்களுக்கே சொந்தம்! – சபையில் சரத் வீரசேகர எம்.பி (வீடியோ இணைப்பு)

மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு; வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை

யாழில் எரிபொருள் நிலையத்தில் கார்ட்ஸ் விளையாடும் இளைஞர்கள்! – வைரலாகும் புகைப்படம்

Leave a Reply