நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருள் தட்டுப்பாடு மிகத் தீவிர பிரச்சினையாக காணப்படுகின்றது.
இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு துறைசார் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றது.
மண்ணெண்ணெய் இன்மையால் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் சிறுபோக வெங்காயச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலையில் விவாசாயிகள் பலரும் திண்டாடுகின்றனர்.
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் செம்பியன்பற்று,அம்பன்,குடத்தனை ஆகிய கிராமங்களில் நெல் அறுவடைக்குப் பின்னர் பெருந்தொகையான நிலப்பரப்பில் புலோலி, கரவெட்டி, அல்வாய் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சிறுபோக நெற் செய்கையை மேற்கொள்வது வழக்கம்.
இச் சிறுபோக வெங்காய செய்கையில் அதிக விளைச்சல் கிடைத்து விவசாயிகள் பெரிதும் நன்மை அடைந்து வந்துள்ளார்கள்.
இப் பிரதேசத்தில் சிறுபோக வெங்காய செய்கைக்காக விவசாயிகள் விளைநிலங்களைப் பண்படுத்தி வெங்காய நடுகையில் ஈடுபடுவதற்காக தயாராக இருந்து வருகின்ற போதிலும், நடுகை செய்ப்படும் வெங்காயப் பயிருக்கு தண்ணீர் இறைக்க போதிய மண்ணெண்ணெய்யை எதிர் பார்த்து காத்திருந்து வருகின்றனர்.
எனினும் இரண்டு மாதங்களுக்கு மேலாக இப் பிரதேசத்தில் மண்ணெண்ணெய் வராமையினால் வெங்காயத்தை பயிரிடாமல் காத்திருக்கின்றனர்.
பிற செய்திகள்
கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)
சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்
விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)





