வைரஸ் காய்ச்சலிலிருந்து குணமடையும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வைரஸ் காய்ச்சலில் இருந்து குணமடைந்து வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச சிகிச்சை நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் போது பின்பற்றப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் ஊடாக பல்வேறு வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பை பெறமுடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிதாக பிறந்த குழந்தைகளிடையே ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமானால் உடனடியாக வைத்தியரின் உதவியை நாடுமாறும் குடும்பநல சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆபத்தான காரணிகளை புறக்கணிப்பதானது, சிறுவர்களின் மரணத்திற்கு வழிவகுக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறசெய்திகள்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)

சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்

விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)

ரணிலை பதவி நீக்க முயற்சியா?

போராட்டங்களில் ஊடுருவிய ஆளுங்கட்சியின் குண்டர்கள்

Leave a Reply