பொலிஸாருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களை தாக்கும் பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸாரின் கடமை பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் பாதுகாப்பதும் ஆகும், மாறாக இன்று அரசியல் தலைவர்களைப் பாதுகாப்பதாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நேற்று முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை கைது செய்யவும், கருத்து வேறுபாடுகளை அடக்கவும் திட்டமிட்ட முயற்சி நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்தும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சிகள் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

பிற செய்திகள்

குருந்தூர் மலை பௌத்தர்களுக்கே சொந்தம்! – சபையில் சரத் வீரசேகர எம்.பி (வீடியோ இணைப்பு)

வடக்கு – கிழக்கில் கடலட்டை கிராமங்களை உருவாக்க அமைச்சரவை அனுமதி

பாதுகாப்பு செயலாளர் – அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் சந்திப்பு

தமிழகத்துக்கு வந்த ஈழத் தமிழர்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்து

பிரேசில் நாட்டுடன் சுற்றுலாத்துறை மேம்பாடு; இலங்கை முயற்சி!

நாடாளுமன்றில் இருந்து சஜித் அணியினர் வெளிநடப்பு!

Leave a Reply