திருகோணமலையில் மக்கள் குடியிருப்பு பகுதியிலுள்ள வடிகாலமைப்பொன்று முறையான கவனிப்பின்றி காணப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருகோணமலை – பாலையூற்று பகுதியில், நாகம்மாள் வீதியிலுள்ள வடிகாலமைப்பே இவ்வாறு சீரமைக்கப்படாமல் குப்பைகளால் நிறைந்து உள்ளது.
குறித்த பகுதியில் மக்கள் செறிந்து காணப்படுவதோடு, குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் என அனைவருக்கும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் குறித்த வடிகால் உள்ளதாக அங்குள்ள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில், குறித்த வடிகால் குப்பை கூளங்களால் நிறைந்து அசுத்தமாக காணப்படுகின்றமை கவனிக்கத்தக்க விடயம்.
எனினும், இதற்குரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தாமதிப்பதாகவும், இதன் பொருட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, திருகோணமலை நகராட்சிமன்ற அதிகாரிகள் இவ்விடயத்தை கவனத்தில் எடுத்து, விரைவான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு குறித்த பகுதி மக்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.







பிறசெய்திகள்
கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)
சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்
விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)





