இலங்கையின் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையே நாட்டின் டொலர் வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையை நாம் அனைவரும் புரிந்துகொண்டு நாட்டை மீளமைக்க கூடிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊரியாங்கட்டு பிரதேசத்தில் நேற்று (20) திங்கட்கிழமை மாலை நடைபெற்ற விவசாயிகளுக்கு இலவச விவசாய பொதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,
“எதிர்காலத்தில் கிழக்கு மாகாண விவசாயிகள் நாட்டிற்குத் தன்னிறைவான உணவை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான உதவிகளை வழங்கும் வகையில் உரம், விதை உற்பத்தி உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வெள்ளரி மற்றும் பழங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வாகரை மக்கள் ஏற்கனவே டொலர்களை சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களை நாம் மேலும் ஊக்குவிக்க வேண்டும். அரிசியில் தன்னிறைவு பெற்ற நாடு நாமே . வரவிருக்கும் உணவு நெருக்கடி பற்றி பேசுகிறோம்.
அதிலிருந்து விடுபட ஒவ்வொரு அங்குல நிலத்திலும் விவசாயம் செய்ய வேண்டும். மேலும், ஏற்றுமதி விவசாயத்தை நிறுவ அதிக ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அதன் மூலம் இந்த டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். நமது நாட்டின் விவசாயத்திற்காக வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் கடனும் உதவியும் பெறுகிறோம்.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. இந்த மானியங்களும், கடன்களும் பயன்பெறுமா என்பது சந்தேகமே. திட்டங்களுக்கு பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளது.
ஆனால் வருமானம் செலவழித்த தொகையை விட மூன்று மடங்கு குறைவு. இதுபோன்ற திட்டங்களில் ஏதாவது வேலை செய்ய வேண்டுமா என்பதை நாங்கள் பரிசீலிக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.
மேலும், அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பொதிகளை ஆளுநர் இலவசமாக வழங்கினார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா, மாகாண விவசாயப் பணிப்பாளர் கலாநிதி. எம் .ஹுசைன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிற செய்திகள்
கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)
சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்
விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)
Facebook: https://www.facebook.com/samugamweb
Instagram: https://www.instagram.com/samugammedia/
Twitter: https://twitter.com/samugammedia





