இ.போ.ச பேருந்து ஊழியர்கள் பெற்றோலை பெறுவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரி யாழ். சாலை வாயிலை மூடி ஆர்பபாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ் சாலையில் தனியார் பேருந்துகளுக்கான டீசல் விநியோகம் இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் தனியார் பேருந்துகளுக்கு டீசலை வழங்க அனுமதிக்க முடியாது என தெரிவித்து மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இ.போ.ச பேருந்து ஊழியர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இ.போ.ச சாரதிகள் நடத்துநர்கள் பலர் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் இல்லாததால், பலர் பணிக்குச் செல்லாதிருப்பதாகவும், அது விடுமுறையாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை.
யாழ் சாலையில் தனியார் பேருந்துகளுக்கு டீசல் விநியோகம் இடம்பெற்று வருகிறது. எமது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை குறித்த செயற்பாட்டையும் இடைநிறுத்தவுள்ளோம். என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சமூகம் மீடியாவுக்கு தெரிவிக்கையில்,
இ.போ.ச. நிரப்பு நிலையத்தில் எங்களுக்கு எரிபொருள் பெறுவதற்காக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அது சரியான முறையில் ஒழுங்கமைத்து தரப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
எங்களுடைய சேவையை சரியான முறையில் செய்ய வேண்டுமெனின், எங்களுக்கு ஒழுங்கமைப்பட்ட முறையில் டீசலை பெற்றுத் தரவேண்டும்.
ஆனால், இரண்டு நாட்களாக இ.போ.ச. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன் நாங்கள் நின்று கொண்டு இருக்கிறோம். வீட்டுக்கு செல்லாமல் பஸ்ஸிலேயே படுத்துறங்கிக் கொண்டிருக்கிறோம்.

எனினும், இதுவரையில் ஒழுங்கான பதில் எமக்கு கிடைக்கவில்லை. இன்று 50 பேருந்துகளுக்கு டீசல் தரப்படும் என்று சொன்னபோதிலும், இதுவரையில் தரவில்லை.
இது எங்களுடைய தொழிலாக இருப்பினும், மக்களுக்கான ஒரு சேவையாகவே இதனை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
அரசாங்கம் உங்களுக்கு தேவையான டீசலை, அருகில் உள்ள இ.போ.ச. நிரப்பு நிலையத்தில் 24 மணிநேரமும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

ஆனால், இதுவரையில் அப்படியான ஒரு ஒழுங்கமைப்பும் இடம்பெறவில்லை. இனியும் எங்களுக்கு டீசல் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.
இன்று இதில் 80 இற்கும் அதிகமாக பேருந்துகள் நிற்கின்றபோதிலும் , 50 பேருந்துகளுக்கு மாத்திரமே டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர்களுக்கும் டீசல் கிடைக்கும் என்பதில் சரியான முடிவு இல்லை. பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.- என்றனர்.

https://www.facebook.com/samugamweb/videos/757050952411264
பிற செய்திகள்
Facebook:https://www.facebook.com/samugamweb
Instagram:https://www.instagram.com/samugammedia/
Twitter:https://twitter.com/samugammedia





