
வர்த்தகரான தம்மிக பெரேராவை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமித்தமையை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 5 அடிப்படை உரிமை மனுக்களையும் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
முன்னதாக பெசில் ராஜபக்சவின் பதவி விலகலை தொடர்ந்து வெற்றிடமாகியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு தம்மிக்க பெரேரா பெயரிடப்பட்டார்.
இந்நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபேரணை மனுவும் நான்கு அடிப்படை உரிமை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும் வரையில் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ சத்தியப்பிரமாணம் செய்யப் போவதில்லை என வர்த்தகர் தம்மிக்க பெரேரா நேற்று (20) உயர் நீதிமன்றில் உறுதிமொழியளித்தார்.
தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை இன்று (21) உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.அதேவேளை நாளை தம்பிக்க பெரேரா பாராளுமன்றிற்கு வருகை தருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்
கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)
சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்
விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)
Facebook: https://www.facebook.com/samugamweb
Instagram: https://www.instagram.com/samugammedia/
Twitter: https://twitter.com/samugammedia





