ஓமந்தையில் பொதுகுழாய்கிணறு கையளிப்பு!(படங்கள் இணைப்பு)

வவுனியா ஓமந்தை பனிக்கர்புளியங்குளம் பகுதியில்  பொதுக்குழாய் கிணற்றினை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (21) இடம்பெற்றது.

இக்கிராமத்திலே நீண்டகாலமாக மக்கள் குடி நீரை பெற்றுக்கொள்வதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்த நிலையில் சமூக அமைப்பின் நிதி பங்களிப்புடன் இக் குடிநீர் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டு இக் குடிநீர்திட்டத்தினை திறந்து வைத்தார்கள்.

தமிழருவி சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்  நிகழ்வில் வவுனியா தெற்கு பிரதேச  சபை தலைவர் த.யோகராசா மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply