.-ஜே.கே.யதுர்ஷன்–
பொருளாதார நெருக்கடியில் கர்ப்பிணி தாய்மார்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பிரசவ காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் திருக்கோவிலில் இடம்பெற்றது
.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பிரசவத்தை எதிர்நோர்க்கும் கற்பிணித்தாய்மார்களின் நலன்களை பாதுகாக்கும் முகமாக பிரசவகால முன் ஆயத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி MOH.Dr.P.மோகனகாந்தன் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றது…
இந் நிகழ்வில் கல்முனை பிராந்திய தாய்சேய் நல வைத்திய அதிகாரி MOMCH.Dr.M.H.றிஸ்வின் நிகழ்வின் விசேட அதியாக கலந்து கொண்டார்…
மேலும் இவ் கலந்துரையாடலில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிராந்திய தாய்சேய் வைத்திய அதிகாரி ஆகியோரினால் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
01.தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கற்பிணி தாய்மார்கள் குறித்த காலப்பகுதியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுதல்…
02.கர்பகால வலி ஏற்படும் போது வைத்திய சாலைக்கு விரைவில் செல்லக்கூடிய தூரத்தில் இருத்தல்..அத்தடன் கற்பினி தங்கி இருக்க கூடிய வசதிகளுடன் இடங்கள் ஒழுங்கு படுத்தப்படுதல் மற்றும்அவசர போக்குவரத்து சேவைகளான அம்பியுலன்ஸ் மற்றும் 1990 அம்பிலன்ஸ்,சுகாதா வைத்திய அதிகாரியின் அலுவலக வாகனம்,பிரதேச சுகாதார பிரில் உள்ள கிராம சுகாதார பிரிவுகளின் உள்ள முச்சக்கரவண்டில் தயார் நிலையில் வைத்திருப்பது மற்றும் அவர்களுக்கு எரிபொருள் வழங்குவது பற்றியும் இந் நிகழ்வில் கலந்துரையடப்பட்டு முடிவுகளும் எடுக்கபட்டது …குறிப்பிடத்தக்கது….
மேலும் இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr.P.மோகனகாந்தன் திருக்கோவில் ஆதார வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் Dr.மசூத்,திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோத்தர்கள்,திருக்கோவில் சுகாதார பிரிவின் உத்தியோத்தர்கள், சமூர்த்தி உத்தியோத்தர்கள்,கிராமசேவையாளர்கள்,ஆட்டோ சங்கதலைவர் ,மத தலைவர்கள்,கிராம சங்க உறுப்பினர்கள் ,திருக்கோவில் எரிபொருள் நிரப்பு நிலையச்சங்க உறுப்பினர் ,பொதுமக்கள் ஆகிய பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்…






