நாட்டில் ஏற்கனவே விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான உர வகைகளையும் மண்ணெண்ணையையும் மானிய அடிப்படையில் தொடர்ச்சியாக வழங்க முடியுமாக இருந்தால் நெல் , மரக்கறி உள்ளிட்ட தானியங்களை போதிய அளவு உற்பத்தி செய்வதுடன் உணவுப் பொருட்களின் விலையேற்றங்களையும் கட்டுப்படுத்தி சகல மக்களின் உணவுத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.
ஆனால் அரசாங்கம் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தேவையான மண்ணெண்ணை மற்றும் பயிர்ச்செய்கைக்குரிய யூரியா உரம் போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதை பற்றி சிந்திக்காது புதிய நிலங்களில் பயிர்ச் செய்கை மேற் கொள்வது தொடர்பாக பெருமளவு விவசாயிகள் அவலங்களை சந்திக்க இராணுவத்துடன் கலந்துரையாடி வருகிறது.
புதிய பயிர்ச்செய்கைக்கு பெறப்படும் மூலப் பொருட்களை ஏன் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் வழங்க முடியவில்லை.
சிறுபோக , பெரும்போக பயிர்ச்செய்கைகள் வீழ்ச்சியடைந்த பின்னர் புதிய பயிர்ச்செய்கை மூலம் ஈடு செய்ய முடியுமா? ஆட்சியாளரின் திட்டமிடல் பற்றி மக்கள் வேதனை அடைகின்றனர்.
பிற செய்திகள்





