
ஹட்டன், ஜுன் 22
ஹட்டன் இ.போ.ச பஸ் டிப்போ மூலம் தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஹட்டன் டிப்போ முகாமையாளர் டபிள்யு.ஜி.கே. கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
ஷட்டனிலிருந்து குறுகிய தூர சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு வாரத்துக்கு 100 – 150 லீற்றர் டீசலை வழங்கவும் தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு தினமும் 100 லீற்றர் டீசலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன் தினமும் 20 – 30 பஸ்களுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பஸ்கள் தொடர்பான சுற்றுநிருபம், ஹட்டன் – தனியார் பஸ் சேவை அலுவலகத்திடமிருந்து கோரப்பட்டுள்ளது என்றார்.





