முதலில் விவசாயத்திற்கு எரிபொருள் வழங்குங்கள்! கஞ்சன விஜேசேகரவுக்கு அவசர கடிதம்

இந்திய அரசாங்கத்தினால் பெரும்போகத்துக்காக வழங்கப்படும் யூரியா உர கையிருப்பை விநியோகிப்பதற்கு 125,000 லீற்றர் எரிபொருளை வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

எதிர்வரும் 6ஆம் திகதி 65,000 மெட்ரிக் டன் யூரியா உரம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாகவும், அதனை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க 2,000 பார ஊர்திகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் யூரியா உர தொகை எதிர்வரும் மாதம் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply