ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிப்பு

கொழும்பு,ஜுன் 22

கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் மே 9 இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு புதிய சரீர பிணைகளில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கனவே அவர் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவின்படி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தததையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் அழைக்கப்பட்ட போது அவரை புதிய பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply