காலிமுகத்திடல் போராட்டம் குண்டர்களின் ஒதுங்குமிடமாக மாறியுள்ளது: விமல் வீரவங்ச

கொழும்பு,ஜுன் 22

காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பத்தில்  நியாயமான மக்கள் போராட்டமாக இருந்து தற்போது அது, போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் மோசடியாளர், குண்டர்களது ஒதுங்குமிடமாக மாறியுள்ளது.

அதனால் ஏன் அரசாங்கம் அதனை இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறது  என  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்  எதிர்க்கட்சியின் சுயாதீன எம்.பி.யுமான விமல்  வீரவங்ச தெரிவித்தார்.

நாட்டை அராஜக நிலைமைக்கு மாற்ற பைத்தியகாரர்கள் போன்ற செயற்படும் போராட்டம் தொடர்பில்  ஏன் இன்னும் பொறுத்துக்  கொண்டிருக்கின்றீர்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (21)விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே போதே இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply