ஒலுவில் துறைமுக அபிவிருத்திப் பணியில் வீணாக அரசியல் செய்யாதீர்கள்: டக்ளஸ்

ஒலுவில்,ஜுன் 22

ஒலுவில் துறைமுகத்தை  அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு  விடுவது  தொடர்பில்  கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை (22) கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர்  கருத்து தெரிவிக்கையில், இந்த துறைமுகத்தை மேலும் அபிவிருத்திக்கு உட்படுத்துவதன் ஊடாக சிறந்த பயனைப் பெறுவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

எனவே இவ்விடயத்தில் வீணான அரசியல் செய்யாமல் அனைத்து தரப்பினரும் முன்வந்து ஒத்துழைப்புகளை வழங்க வேண்டு எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் துறைசார் அதிகாரிகள் மீனவ சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply