ரோயல் பார்க் கொலை விவகாரம்; மைத்திரியின் கருத்தை நிராகரிக்கும் ரதன தேரர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருந்த கருத்தை நாடாளுமன்ற உறுப்பினரான அதுரலிய ரதன தேரர் மறுத்துள்ளார்.

‘ரோயல் பார்க் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு மரண விதிக்கப்பட்டிருந்த நபருடன் என்னைச் சம்பந்தப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்ததிரிபால சிறிசேன கருத்து வெளியிட்டிருந்தார்.

குற்றவாளி மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை விவகாரத்துடன் என்னை தொடர்புபடுத்திய மைத்திரிபால சிறிசேன, குறித்த மரண தண்டனைக் கைதியை விடுதலை செய்யுமாறு நான் கோரியதாகவும் கூறியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது’ என அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply