புத்தளம் – மதுரங்குளியில் எரிபொருள் வரிசையினால் இன்று மாலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
மதுரங்குளி நகரில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கொள்வனவுக்காக வீதியின் இரண்டு பக்கத்திலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளமையே இந்த வாகன நெரிசலுக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி நகரில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்றில் டீசல் விநியோகிக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன், பெற்றோல் பெறுவதற்காக நேற்று முதல் மதுரங்குளி பிரதான நகரில் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன வீதியில் இரண்டு பக்கங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் இன்று மாலையும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
எனினும் போக்குவரத்து பொலிஸார், அங்கு வருகை தந்து மேற்படி போக்குவரத்து நெரிசலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.



பிற செய்திகள்





