மாணவர்களுக்கான சத்து உணவிற்கு நிதி வழங்கி வைப்பு! யாழ்/கொக்குவில் ஸ்தான சி.சி. தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 105 மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்குரிய சத்து உணவு வழங்குவதற்க்காக
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ் தீவகம் வேலணை மேற்கு சரவணையை சேர்ந்த திரு.விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான தலைவர், நா.தனேந்திரன்,செயலாளர்,N.விந்தன் கனகரட்ணம்,
ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோர் இணைந்து பாடசாலையின் அதிபர் திருமதி P.சமண்முகராஜா மற்றும் ஆசிரியர் திருமதி தயாநிதி தர்மரத்தினம் ஆகியோரிடம் ரூபா எண்பதினாயிரத்தை இன்று வழங்கி வைத்ததுடன் மாணவர்களுக்கான சத்து உணவுத் திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தனர்.
அரசாங்கத்தினால் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுவந்த சத்து உணவுத் திட்டத்திற்கான நிதிக் கொடுப்பனவுகள் கடந்த ஐந்து மாதங்களாக அரசால் நிறுத்தப்பட்ட நிலையில் வறிய நிலை குடும்பங்கள் பலவற்றின் பிள்ளைகள் வீட்டில் காலை உணவை உண்ண வசதி இல்லாமல் பாடசாலையால் வழங்கப்படும் உணவையே நம்பி வரும் நிலையில் குறித்த பாடசாலைக்கு இன்று எம்மால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.





பிற செய்திகள்
- இலங்கையில் உச்சம் தொட்டது குவைத் தினாரின் பெறுமதி
- மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி! – அமைச்சர் தகவல்
- எரிபொருள் நிலையங்களில் இராணுவத் தலையீடு தேவையற்றது! சட்டத்தரணி ஸ்ரீகாந்தா
- நான் பெருமைப்படுகிறேன்; தன்னை கேலி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஹிருணிகா!
- வீதியில் வாகனத்தை நிறுத்தி எரிவாயு பெறும் பொலிஸ் அதிகாரி!
- கர்ப்பிணி நாயால் இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka





