இன்று சுகாதார சேவையாளர்களுக்கு 85 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படும் – P.M.K .RAHUMAN எரிபொருள் நிரப்பு நிலையம்
-பாறுக் ஷிஹான் –
இன்று வெள்ளிக்கிழமை(24) அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் நாடு பூராகவும் 85 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான எரிபொருட்களும் ஏனைய 500 இற்கு மேற்பட்ட நிலையங்களில் பொது மக்களுக்கான எரிபொருட்களும் வழங்கப்படவுள்ளது.
அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நிலையங்கள் கீழே உள்ளவாறு அமைகின்றது.
கீழ்வரும் எரிபொருள் நிலையங்களில்பொது மக்களுக்கு நாளை(24) வழங்கப்பட மாட்டாது.
- P.M.K .RAHUMAN-KALMUNAI
- AMPARA MPCS LTD-AMPARA
- M.C KALDEEN-AKKARAIPATTU
- H.M.W.BANDARA-UHANA
- S.A.NUSRATH ALI -POTTUVIL
- D.M .JAYAWARDENA-NAWAMEDOGAMA
எனவே சுகாதார பிரிவுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் தத்தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி அமைதியாக எரிபொருள் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.





