
அலுவலக ரயில் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மாலை 4.35 மணியளவில் சிலாபம் நோக்கி புறப்பட்ட போது இடையில் பெரலாண்டா உப புகையிர நிலையத்தில் ரயில் நின்றது.
இந்த ரயில் எரிபொருள் இல்லாமல் இடையே நின்றாதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) நிராகரித்துள்ளது.
எரிபொருள் இல்லாமல் எந்தவொரு புகையிரதமும் திடீரென நிறுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளது.
இன்ஜினின் குளிரூட்டும் அமைப்பில் (locomotive’s coolant system) நீர் மட்டம் குறைந்ததாலேயே ரயில் நிறுத்தப்பட்டது என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) தெரிவித்துள்ளது.
இதனால் ரயிலில் இருந்த பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாமலேயே வேறு ரயிலில் மாற்றப்பட்டதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்





