மாலைதீவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற யாழ். மாணவன்!

மாலைதீவில் நடைபெற்ற மேற்காசிய வலய 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவன் பிரகலதானன் ஜனுக்சன் வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

ஆசிய சதுரங்க சம்மேளனத்தினால் ஜூன் 17 – 22ஆம் திகதி வரை இப்போட்டிகள் மாலைதீவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

9 சுற்றுக்களைக் கொண்ட இச்சுற்றுப் போட்டியில் 6 வெற்றிகள் மற்றும் ஒரு சமம் (Draw) உள்ளடங்கலாக 6 1/2 புள்ளிகளுடன் ஜனுக்சன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

பிற செய்திகள்

Leave a Reply